தமிழீழத்தில் முன்பு பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் ஒன்று தற்போது யாரோ கவனப்படுத்தியதை அடுத்து சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விடயம் இதுதான்:
யாழ் குடா மீதான தமது கட்டுப்பாட்டைப் புலிகள் இழந்த பிற்பாடு அங்கு வேவு நடவடிக்கைகளுக்காகச் சென்ற இரு புலனாய்வுத் துறை போராளிகள் தாம் செல்லும் பகுதியில் தினமும் இரண்டு சிங்கள படையினர் உள்ளூர் கள் இறக்கும் தொழிலாளியிடம் இரகசியமாகக் கள்ளு வாங்கிக் குடிப்பதை அவதானித்து விட்டு ஒரு நாள் அவர்கள் குடிக்கும் கள்ளு முட்டியில் சயனைட்டைக் கலந்து அந்த இரு சிங்களப் படையினரையும் கொன்றிருந்தனர்.
புலனாய்வுத் துறை போராளிகள் என்ற அடிப்படையில் அதன் பொறுப்பாளரான பொட்டம்மானையும் கூப்பிட்டு செமத்தியாக ‘டோஸ்’ விட்டு/ அப் போராளிகளின் பொறுப்பாளரது ‘காத்தையும்’ புடுங்கி/ சம்பந்தப்பட்ட இரு போராளிகளையும் ‘பங்கருக்குள்ளும்’ தள்ளினார் தலைவர்.
இதுதான் பிரபாகரனின் நீதி.
இன அழிப்பு நோக்குடன் மண்ணை ஆக்கிரமித்திருந்த படையினரை தாக்கி விரட்டுவதில் கூட அறம்/ மாண்பு/ மனித நேயம்/ வீரத்தைக் கடைப்பிடிப்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
அவர்கள் எதிரிகளானாலும் வீரர்கள், அவர்களைக் கோழைத்தனமாகக் கொல்லக்கூடாது என்பதை அனைத்து போராளிகளும் உணரவே அன்று அந்த இரு போராளிகளுக்கும் தண்டணை வழங்கினார் தலைவர்.
ஆனால் அந்தத் தலைவன் மீதும்/ தளபதிகள்/ போராளிகள் மீது மட்டுமல்ல அப்பாவி மக்கள் மீதும் கோழைத்தனமாக இரசாயன குண்டுகளை வீசி இறுதி அழித்தொழிப்பை நடத்தி முடித்தது அரச பயங்கரவாதம்.
அது மட்டுமல்ல, எதிரிப் படைகளைக் கொல்வதிலேயே அறத்தைக் கடைப்பிடித்த அந்தப் புரட்சியாளன் இறுதி இன அழிப்பின் போது தனது சொந்த மக்களையே சுட்டதாக கதைகளை வடிவமைத்தது அரச பயங்கரவாதம். அதை அன்றைய சூழலும் எமது மக்களே நம்புமளவிற்கு ஏதுவாக இருந்ததும் பெரும் துயர வரலாறு.
இப்போது நமது மக்கள் தெளிந்து விட்டார்கள்.
ஆனால் உடனடியாக தெளிய வேண்டிய வேறு ஒரு தரப்பு இருக்கிறது – அது வேறு யாருமல்ல முஸ்லிம்கள்.
முஸ்லிம் தரப்பு இன அழிப்பு அரசுடன் இணைந்து தமிழ் மக்கள் மீதும் அவர்கள் நிலங்கள் மீதும் பாரிய இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் அவற்றை எல்லாம் மறந்து விட்டு காத்தான்குடி படுகொலைகளைப் கெட்டியாகப் பிடித்து தொங்கியபடி தமிழ்த் தரப்புடன் இணைய மறுத்து வருகிறார்கள்.
உண்மையில் தலைவருக்கு இத் தாக்குதல் குறித்து முன்பு எதுவுமே தெரியாது. அவர் அதற்குக் கட்டளையிடவும் இல்லை.
அது ஒரு சில போராளிகளும் உள்வாங்கப்பட்ட உள்ளக / வெளியகச் சதி.
மேலே குறிப்பிட்ட தலைவரின் நீதியையும்/ ஈஸ்டர் தாக்குதல் பின்னணிகளையும் ஒப்பிட்டே சுலபமாக இதை முஸ்லிம்கள் இனங்காண முடியும்.
இனி வரப் போகும் இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைக்க முஸ்லிம்களுக்கு இப் புரிதலும் / தமிழ்த் தரப்புடனான இணைவும் அவசியம்.
A Switzerland-based Eezham Tamil youth group, ‘Phoenix – the Next Generation’, has photostatically reproduced the rare 314-page compilation officially published by the Headquarters of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in September 1993 in Jaffna. The book contains selected letters, interviews and statements of LTTE Leader Velupillai Pirapaharan starting from his first media interview in March 1984. The compilation consists, amongst others, of a letter that declines LTTE representation at a meeting held in New York in May 1985, appeals to the leaders of India and Tamil Nadu during the LTTE-IPKF war in 1987, and a letter of solidarity addressed to South African (ANC) leader, the late Oliver Tambo, in July 1988. The reproduction has been made from a book obtained at the public library of Jaffna in the past. The book, with ID 9907, is no longer accessible at the library.
The compilation is titled Eṉatu Makkaḷiṉ Viṭutalaikkāka (எனது மக்களின் விடுதலைக்காக, For the Liberation of My People).
Nitharsan, the coordinator of Puradsi Media of the youth group, led the launch event in Bern on Sunday, where the first copy of the publication was dedicated to those who sacrificed their lives for Tamil Eelam.
The event also featured a speech by a former LTTE member, who had closely witnessed the cultural and upbringing projects of the LTTE in the two decades that followed the period covered by the book in the de-facto state of Tamil Eelam.The former LTTE member appreciated the publication work being carried out by the youth group. Only by knowing the contemporary politics and the struggle of the preceding decades the future generations could evolve the future discourse, the ex-LTTE member said.
The book also reflects the significance of political renditions in Tamil by the late Anton Balasingham before, during and immediately after the Indian intervention.
Nitharshan, in his speech, said that the book was a prime source enlightening the readers how the LTTE leader evolved a genuinely independent movement without getting into the agenda of any outside power seeking to influence or exploit the armed liberation movement of Eezham Tamils.
“We [the Tamil diaspora youth] should not allow us to get waylaid by the talk of unitary and federal forms of the constitution in the island. As far as we are concerned, our source of inspiration should always be the de-facto state of Tamil Eelam that existed before the SL State waged the genocidal onslaught in 2009 with the backing of all the outside powers.”
He observed how the British allowed the Sinhala nationalist leaders in the South to evolve the unitary state system in Ceylon into unitary and genocidal Sri Lanka in the post-Second World War context. Furthermore, the Cold War era had emboldened the unitary state system, which under the rule of JR Jayawardene introduced the executive presidential system following the US model in 1978.
The USA was toeing the same geopolitical line of the British, giving significance to Trincomalee-oriented naval access in the [then the overwhelmingly Tamil] East and air access in the West [of the Sinhala South].
It was in 1996, after the period covered in the book up to 1993, the elite US ‘Green Beret’ corps provided training to the SL military, he recalled.
However, the LTTE-led armed struggle continued achieving military and diplomatic parity of status in 2001.
During the peace process, the powers openly recognised that it was not possible to militarily defeat the LTTE. However, they contributed significantly to the ‘One State One Military in the island’ paradigm by tilting the power of balance and allowing the SL State to complete the genocidal onslaught, he said.
Following is an English translation of the contents featured in the book, as provided by the Puradsi Media:
1
Foreword I – IV
2
History is my guide
1
3
State oppression & armed resistance
13
4
The national force of Tamil Eelam: Leader Prabhakaran’s letter
21
5
Ceasefire & peace talks
25
6
Why did the Thimbu Talks end in failure?
31
7
A liberated sovereign Tamil Eelam state is our struggle’s goal
35
8
The Sinhalese government prefers a military solution
41
9
Traitors are more dangerous than enemies
51
10
Why was the organisation of the Liberation Tigers formed?
55
11
Struggling for freedom is our historic duty
65
12
The interference of the Indian military in Tamil Eelam is unnecessary
73
13
My life’s background, goals and priciples
77
14
The Tamil homeland is the foundation of our nationalism
95
15
Hunger strike unto death: the national leader’s explanation
101
16
The Tamil Nadu government bends to the national leader’s demands
103
17
Webs spun to destruct the tamil nation
105
18
Ahimsa ideology & the armed struggle
111
19
Prosperity of the proletariat
119
20
The historically significant Suthumalai Declaration
123
21
The Indian government is upholding its national interests
127
22
Thiyagi Thileepan is an idealistic flame
133
23
Arresting commanders contradicts the agreement
137
24
The unforgivable crime committed against our people
139
25
The war given by India: a letter to M.G.R. from the national leader
143
26
Letters written by the national leader to India’s Prime Minister, Rajiv Gandhi
149
27
The Indian military’s atrocities: a letter to the U.N. by the national leader
155
28
Indo – LTTE war: the national leader’s explanation
161
29
Send the UNHRC to Tamil Eelam
169
30
The national leader’s 3rd letter to Rajiv Gandhi
173
31
The national leader’s declaration to the World Tamil Conference
177
32
The national leader’s request to the African & United Nations
181
33
The oppressed will eventually succeed
185
34
The UN must attempt to expel the Indian forces
189
35
The national leader’s request to a conference held by Non-Aligned Movement
193
36
The most significant historic mistake committed by the Indian government
197
37
A dark chapter in our liberation struggle
201
38
Our excessive self-confidence is our strength and weakness
207
39
Annai Poopathi’s sacrifice is unmatched in global history
213
40
The event which gave us the spiritual strength to resist the Indian superpower
215
41
Our history is written by our martyrs’ blood
217
42
The women have risen as a revolutionary force
219
43
A self – sufficient economy is the foundation of a separate state
223
44
Revolutionary creations are necessary to cultivate the liberation struggle
225
45
All of the people who contributed to the revolutionary struggle are māmaṉitar
229
46
A war cannot be conducted if there is a fear for losses
233
47
The path to a political solution: The national leader’s explanation
239
48
Sencholai children’s home: the national leader’s congratulatory remarks
245
49
May it sound as the war drums for a war of truth
247
50
For those yearning for heroic liberation, determination is the strongest weapon
249
51
What is the liberation of the women? The national leader’s explanation
253
52
Dharma will prevail in a war of truth
257
53
People are facing the torrents of oppression like a mountain
261
54
Our arts and culture are the soul of our nation
265
55
Politics is the service provided to suffering people
269
56
I have a dream which must become a reality
273
57
The martyrs who stand as the pillars of our liberation organisation
275
58
Honesty, virtue and discipline are essential for the implementation of justice
281
59
The struggle is the shield of education; education is the struggle’s fort
285
60
Kittu is an individual legacy: a stunning idealist
289
61
What is the path to a peaceful solution? Thalaivar’s explanation to BBC
293
62
Women’s liberation struggle: The LTTE’s spark
301
63
When life is incomplete, knowledge is essential
305
64
Iron men in their goals: the national leader’s dedication for the Black Tigers
307
65
The poet who renewed wartime literature
311
66
Social justice must blossom upon the basis of truth
இவ்வுலகில் இருவகையான ஆட்டங்கள் உள்ளன. ஒன்று முடிவுறும் ஆட்டம் (finite game), இன்னொன்று முடிவிலா ஆட்டம் (infinite game) [1]. முடிவுறும் ஆட்டம் வெற்றிக்காக ஆடப்படுகிறது. முடிவிலா ஆட்டம் ஆட்டத்தின் தொடர்ச்சிக்காக ஆடப்படுகிறது. பிரபாகரனின் ஆட்டம் முடிவிலா ஆட்டம்; இன்றைய பெரும்பாலான அரசியல் தலைமைகள் விளையாடுவது முடிவுறும் ஆட்டம். புரிதலுக்காக இனி முடிவிலா ஆட்டத்தை பிரபா ஆட்டம் என்றும், முடிவுறும் ஆட்டத்தை XX-ஆட்டம் என்று வைத்துக்கொள்வோம். XX க்கு பதிலாக உங்களுக்குப் “பிடித்த” தலைவர் பெயரைப் போட்டு படிக்கவும். இவ்வாட்டங்கள் தலைவர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல, தனி மனிதனுக்கும் பொருந்தும்.
XX -ஆட்டம் தன்னுடைய நலனுக்காக ஆடப்படுவது. பிரபா ஆட்டம் மற்றவர் நலனுக்காக ஆடப்படுவது.
XX- ஆட்டத்தில், ஆடும்பொழுது ஆட்ட விதிமுறைகள் மாறாது (எ .கா தேர்தல் விதிகள்). பிரபாவின் ஆட்டத்தில் ஆட்டம் நடக்கும் பொழுதே விதிமுறைகள் மாறும். (எ .கா உலக நாடுகளின் ஆதரவு)
XX-ஆட்டத்தில் யார் வெற்றி பெற்றார், தோல்வி அடைந்தார் என்று ஆட்ட விதிமுறைகள் தெளிவான விடையைக் கூறும் (எ .கா. தேர்தல் முடிவுகள்). அம்முடிவை ஆட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பிரபா ஆட்டம் முடிவிலாததால், ஆட்டத்தின் வெற்றி தோல்வி என்பது தீர்மானிக்க முடியாதது. ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
XX -ஆட்டம் ஆட்டத்தின் எல்லைகளுக்குள் நடக்கும். பிரபா ஆட்டம் எல்லைகளுடன் நடக்கும்; எல்லை விரிவாகிக்கொண்டே செல்லும்.
XX-ஆட்டத்தில் உண்மையான முகத்தை மறைத்து முகமுடி அணிந்துதான் விளையாடவேண்டும். கடைசிவரை தனது போலித் தோற்றத்தையே முன்னிறுத்துவர். பிரபா ஆட்டத்தில் முகமுடி இல்லாமல் சுதந்திரமாக ஆடலாம்.
XX-ஆட்டத்தை முழுதாக விளக்கிவிடலாம். பிரபா ஆட்டத்தை முழுதாக விளக்க முடியாது, எல்லை இல்லாதது. அது புதிது புதிதாக பரிணமிக்கும்.
XX-ஆட்டம் ஒரு மேடை நாடகம். நாடகம் முடிந்தவுடன் நமக்கு காண்பிக்க புதிதாக ஒன்று இருக்காது. பிரபா ஆட்டம் உண்மையான திகிலான ஆட்டம். ஆட்டம் என்னென்ன பலன்களை எதிர்காலத்தில் அளிக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.
XX -ஆட்டத்தில் வெற்றி பெறுவோருக்கு பட்டம் கிடைக்கும். பிரபா ஆட்டத்தில் ஆட்டக்காரரின் பெயரே பட்டமாகும்.
XX -ஆட்டத்தில் வாழ்க்கையே போராட்டமாக துன்பத்துடன் இருக்கும். பிரபா ஆட்டத்தில் போராட்டமே வாழ்க்கையாக இன்பத்துடன் இருக்கும்.
XX-ஆட்டத்தில் இறந்தவுடன் அவரின் ஆட்டம் முடியும். பிரபா ஆட்டத்தில் இறந்தாலும் ஆட்டம் தொடரும்.
XX-ஆட்டம் அதிகாரத்திற்காக (Power) ஆடப்படும். பிரபா ஆட்டம் வல்லமைக்காக (Strength) ஆடப்படும். அதிகாரம் என்பது இருப்பதை பங்குபோடுவது. வல்லமை என்பது எதிர்காலத்தை உருவாக்குவது. அதிகாரத்தை அளந்து விடலாம். வல்லமையை அளவிடாமுடியாது, ஏனெனில் ஆட்டம் முடிவுறாதது.
XX – ஆட்டக்காரர்கள் இருக்கும் எல்லைக்குள் எவ்வளவு சுதந்திரத்தை அடைய முடியும் என சிந்திப்பார்கள். பிரபா ஆட்டக்காரர்கள் இதுபோன்ற அரசியலை வெறுப்பார்கள். எல்லைகளை உடைத்து எவ்வளவு தூரம் சுதந்திரத்தை உருவாக்க முடியும் என சிந்திப்பார்கள்.
XX-ஆட்டக்காரருக்கு நேரம் முடிந்த உடன் ஆட்டம் முடிந்து விடும். ஆனால் பிரபா ஆட்டம் முடிவிலா எல்லையில்லா ஆட்டம் என்பதால், அது நேரத்தை உற்பத்தி செய்கிறது. அதன் நேரம் ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்து முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும்.
XX-ஆட்டக்காரருக்கு வேலை (work) என்பது இவ்வுலகில் இருப்பதை அடைந்து பாதுகாப்பது. பிரபா ஆட்டத்தில் வேலை எனபது இவ்வுலகில் இல்லாத எதிர்காலத்தை அடைய முற்படுவது. அவ்வெதிர்காலம் மேலும் பல எதிர்கால வாய்ப்புகளை ஏற்படுத்தும்படி எல்லை இல்லாதது.
XX-ஆட்டத்தில் என்ன சாதித்தோம், என்ன பட்டம் பெற்றோம் என்பதுதான் முக்கியம். பிரபா ஆட்டத்தில் என்ன சாதிக்கவேண்டி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
XX-ஆட்டக்காரர்களின் பார்வையில் பிரபா ஆட்டம் கண்ணுக்கு தெரியாது. அவர்களுக்கு முடிகிற ஆட்டம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
XX-ஆட்டத்தில் இறந்தால், அவரின் காலமும் ஆட்டமும் முடிந்தது. பிரபா ஆட்டத்தில் இறந்தால், புதிய பிரபாக்கள் பிறந்துகொண்டு இருப்பார்கள், ஆட்டம் தொடரும். ஆட்டக்காரருக்கு இறப்பு என்பது இல்லை.
XX- பேச்சில் புதுமை இருக்காது. அவர் பேச்சுடன் அது முடிந்துவிடும், பின்பு யாரும் பேசமாட்டார்கள். பிரபா ஆட்டக்காரரின் பேச்சு தொடர்ந்து கேட்கப்படும், விவாதிக்கப்படும்.
XX- ஆட்டக்காரரின் பேச்சு மற்றவர்கள் பேசுவதை தடுக்கும். பிரபா ஆட்டக்காரர் கேட்பவர், மற்றவர்களை பேச வைப்பவர். இவர்கள் பேசாமல் பேசுவார்கள்.
XX-ஆட்டக்காரருக்கு சமூகத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பு / வித்தியாசம் தெரியாது. பிரபா ஆட்டத்தில் பண்பாட்டை ஒரு தோட்டமாகக் கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு விளைச்சல்களை உருவாக்குவர். அதன் உற்பத்தி திறன் எல்லை இல்லாதது.
XX-ஆட்டக்காரர் மற்றவர்களைப் போட்டியாக எண்ணி நசுக்குவார். பிரபா ஆட்டத்தில் ஆளுமைகள் வளர்த்தெடுக்கப் படுவார்கள்.
XX-ஆட்டத்தில் வெற்றிபெற ஏமாற்றுவேலைகள் செய்தாகவேண்டும். பிரபா ஆட்டத்தில் ஆட்டம் வெளிப்படையாக நடக்கும்.
இவ்வுலகில் தீங்கு (Evil) என்பது முடிவிலா ஆட்டத்தை எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முடிக்க நினைப்பதால் உருவாவது.
புலிகள் முடிவிலா ஆட்டத்தை ஆடியவர்கள். அவர்கள் இறந்தாலும், அவர்களின்பின் மற்றவர்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கையிலேதான் ஒவ்வொரு வீரனும் விதையாகினான். மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு காரணமே அடுத்து வருபவர்கள் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். இறுதிப்போரின் இறுதி நாட்களில் கடைசிவரை போரிட்டு விதையானது, இறுதிப்போரில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் அல்ல, போராட்டம் தொடரும் என்ற நம்பிக்கையில்தான்.
அந்த போராட்டம் ஆயுதப்போராட்டமாக இருக்கவேண்டியதில்லை. அது காலத்திற்கேற்ப எந்த வடிவமும் பெறலாம். இது ஒரு முடிவிலா போராட்டம். ஈழம்தான் அதன் முதல் இலக்கு. இந்த முடிவிலா போராட்டம் ஈழத்தை அடைந்த பின்னும் நிற்கப்போவதில்லை, அது தமிழர் முன்னேற்றத்திற்கான புது இலக்குகளை அமைத்து முன்னேறும்.
இந்த முடிவிலா போராட்டத்தில் இணைவோரின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். முடிவுறும் ஆட்டம் விளையாடுபவரின் ஆட்டம் ஒருநாள் முடிந்துதான் ஆகும், அதனால்தான் அது முடிவுறும் ஆட்டம். அதை ஆடுபவர்களும் வெகு சீக்கிரம் காணாமல் போய்விடுவர். இவ்வுலகில் முடிவிலா ஆட்டமே காலத்திற்கும் நிலைத்து நிற்பது.
[1] கருத்துக்கள் “Carse, James. Finite and infinite games. Simon and Schuster, 2011.” என்ற நூலில் இருந்து பெறப்பட்டது.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைத்த பெருந்தலைவர் அவர்.
தொன்மையும் செழுமையும் வாழ்ந்த பழம்பெரும் பாரம்படியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாமனிதர்.
தமிழன் அடிபட்டு, தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி, தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்தகாலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன், வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு , ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து ,சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்திய பெருந்தலைவர் எங்கள் பிரபாகரன்.
தனியொரு மனிதனாய் நின்று தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி தமிழர்களையே வியக்கவைத்த பெரும் வீரர் அவர்.
குலையாத கட்டுப்பாடும், வழுவாத நேர்மையும் ,தமிழனின் வாழ்வுநெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும் ,இளாகாத வீரமும் ,யாரும் நினையாத வகையாக எவரும் மிகையாக நேசிக்கும் உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் ,கலையாத தேசப்பற்றும், சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக , ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து தளராத துணிவான தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு பெரும் சாதனை படைத்த எம் தளபதி பிரபாகரன்.
பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள்
அவர் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான மனிதர். ஆச்சரியமான பல தன்மைகளாலும் பண்புகளாலும் குணவியல்புகளாலும் நிறைந்திருக்கும் அதிசயப் பிறவி அவர்.
அபரிதமான ஆற்றல்கள் மிக்க தனது அழகான ஆளுமையால் முழுத்தேசத்தையுமே ஆகர்சித்து நின்ற அசாதாரண தலைவர்.
தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.
தமிழர்களின் சேவகனாகி, தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி…. அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சுருண்டுகிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது எம் தேசத்தின் தலைவர் பெயர்.
பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ். என்றும் கிடையாத தலைநிமிர்வு.
தகப்பனால் பிள்ளையும் பிள்ளையால் தகப்பனும் வயிறு வளர்க்கும்(EXT….) இவ் உலகில். வரலாறு வளர்த்த எம் குலசாமிகள். புலனுக்குத் தெரியாத புனித சரித்திர புருசர்கள் இவர்கள்.
பிரபாகரன் சார்லஸ் அன்ரனி…!!!
உலகமே வியந்து நோக்கும் ஒரு மாமனிதனை தந்தையாக கொண்ட ஒருவர்,உலக தமிழ் மக்கள் கொண்டாடுகின்ற தலைவனின் மகனென்று ஆணவமோ,இறுமாப்போ,அகந்தையோ ஏதுமற்ற சாக்லட் குழந்தை சார்லஸ் அன்ரனி.தலைவனின் பிள்ளையென்று எப்போதும் தன்னை காட்டிக் கொள்ளாத பிள்ளை,படித்தது யாழ்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிப்பில் படுகெட்டிகாரன் பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும்.தலைவரின் மகன் என்று ஏதும் பாதுகாப்பு ஒழுங்குகளோ அல்லது ஏதும் சிறப்பு வசதிகளோ சால்ஸ்க்கு ஒன்றுமே இருந்தது இல்லை.வருவதும் போவதும் தெறியாமலே ஒரு சாதாரண மாணவனாகதான் படிப்பை முடித்தார்.அவர் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டதும் வன்னி காடுகளில் தானேயன்றி வெளிநாடுகளில் அல்ல.
உண்மையில் சார்லஸ் சண்டைகளுத்துக்குரிய பிள்ளையே அல்ல அதுவொரு சாக்லெட் குழந்தை என்றுதான் தளபதிமார் கூறுவினம்.தலைவரின் முதல் பிள்ளை என்பதால் தளபதிமார் அத்தனைப் பேருக்கும் செல்லம்.தலைவர் முகாமில் இருக்கின்றரை சால்ஸை பயிற்சியில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறி வாகனம் வளவு திரும்புவதற்குள் “நீ போய் படுத்துக்கோ தம்பி”என்று அனுப்பி வைக்கும் அளவுக்கு சால்ஸ் தளபதிமாரின்ர செல்லம்.
எவரையும் காயப்படுத்தாத தலைவரின் மகனென்று எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத பிள்ளை.மற்ற போராளிகளை போலதான் சால்ஸ்சும்.எல்லோரிடத்தும் அப்பா,மாமா,அண்ணே என்றே குழைந்து திரியும் குழந்தை சார்லஸ் அன்ரனி.இறுதி சண்டையில் ஆமி இறுக்கம் நெருங்கிகொண்டே வர தலைவனின் தலைமகன் என்பதால் தன்னை காப்பாற்றுங்கோ என்றோ,தற்போதுள்ள அரசியல் வியாதிகளைப்போல் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என்றோ ஏதும் கேட்கவில்லை,அவன் அண்ணை பிரபாகரன் ரத்தம் எப்படி கேட்பான் அப்படி ? “செய் அல்லது செத்துமடி”என்ற தன் தகப்பனின் வேத மந்திரத்தையே தானும் உளப்பூர்வமாக ஏற்று களமாடி பிரபாகரன் மகன் என நிருபித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
உண்மையில் கிளிநொச்சி ஆமியிடம் வீழ்ந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடி பிரிவொன்றின் அங்கமாய் புல்மோட்டை காட்டுபகுதிக்குள் நகர்ந்து நிண்டார்.முல்லைதீவு முற்றுகை இருகிக்கொண்டே வர விடுதலைப் போராட்டம் பாதுகாக்கபட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை தளபதிமார் எடுத்தபோது அதை ஏற்க மறுத்து “என்னை நம்பி வந்த மக்களையும் நான் வளர்த்த போராளிகளையும் விட்டிட்டு நகரமாட்டேன் என்று பிடிவாதமாக நிண்டார்.இத்தனையாண்டு காலப் போராட்டத்தையும் இத்தனையாண்டு காலப் போராளிகளின் தியாகத்தையும் அவர்கள் கண்ட கானவையும் மெய்பிக்க வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகன்றே தீரவேண்டுமென்று மேலும் அழுத்தமாக தளபதிமார் சொல்ல. “சார்லஸ் காட்டுக்குள் நிக்கிறான் தன்னையும் மகனையும் காப்பாற்றிக்கொண்டு போராளிகளையும் மக்களையும் அழிவுக்கு கொடுத்தான் பிரபாகரன் என்ற வரலாற்றுபழி என்னை சேரவிடமாட்டேன்”என்று மேலும் தலைவர் பிடிவாதமாக கூற,
தளபதிமார் வேறுவழியின்றி அப்படியானால் சால்ஸை களத்திற்கு அழைத்துகொண்டு வருகின்றோம் என்று தளபதிமார் சொன்ன பிறகுதான் தலைவரின் பிடிவாதம் சற்று தளர்ந்தது அந்த ஒரு நொடி தளபதிமாருக்கு போதுமானதாக இருந்தது.எளிமையாக கூற வேண்டுமென்றால் விடுதலைப் போராட்டத்தையும் தலைவரையும் பாதுகாக்க வேண்டி தளபதிமார் தந்தையிடமே மகனின் உயிரை விலை பேசினர் என்பதே உண்மை.
தமிழுலகே என் தமிழ்சாதியே இப்படியொரு அப்பழுக்கில்லாத உன்னதம் உலகினில் வேறெங்காவது நிகழ்ந்ததுண்டா?
இப்படியொரு நீதியான தலைவனை உலகில் வேறெங்காவது பார்த்ததுண்டா? படித்ததுண்டா? கேட்டதுண்டா? அப்படி கேள்விப் பட்டதுண்டா?
ஒரு பசுவின் கன்றுக்காக தான்பெற்ற மகனையே தேர்காலிட்டு கொன்றானாம் மனுநீதி சோழன் என்று ஏட்டில் படித்திருக்கின்றேன்,மனுநீதி சோழன்கூட தனது ஒரு மகனைதான் கொன்று நீதியை நிலை நாட்டினார் ஆனால் அந்த மனுநீதி சோழனையும் விஞ்சியவர் எங்கள் ஈழமகாராஜன்.பிரபாகரன் வம்சம் என்று ஓங்கி உரக்கசொல் மார்தட்டி பெருமைகொள்.
முகநூல் இன்று நினைவூட்டும் பதிவு இது.. சமகாலத்தில் அவசியமான பதிவும் கூட..
0000000
‘பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல்.
எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’.
பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல ‘நந்திக்கடல்’ அதை அடியோடு நிராகரிக்கவும் செய்கிறது.
அது லெலினிசம், மார்க்சிசம், மாவோயிசம் ஏன் பெரியாரியத்திற்குக் கூட பொருந்தலாம். ஆனால் பிரபாகரனியத்திற்கு அது பொருந்தாது. அதுவே அதன் சிறப்பு.
மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.
தனது கண்ணசைவிலும் கையசைவிலும் ஒரு இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தியது மட்டுமல்ல ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியவர் பிரபாகரன்.
அவர் நடந்தால் அது ஒரு அரசியல். அமர்ந்தால் அது வேறு ஒரு அரசியல். அதுதான் அவர் முள்ளிவாய்க்காலில் நின்ற போது அது ஒரு அரசியலாக இருந்தது. அவர் நந்திக்கடலை நோக்கி நடந்தபோது அது வேறு ஒரு அரசியலாகப் பரிணமித்தது.
இந்த இரு நிலங்களுக்கும் இடையிலான அவரது நடையின் பின்னுள்ள அரசியல் பிரளயத்தை கணிக்க சாதாரண மனித அறிவால் முடியாது.
அதுதான் ‘நந்திக்கடல்’ அதைக் கணித்து அந்த வரலாற்று பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
எனவே பிரபாகரனுக்காக, பிரபாகரனியத்திற்காகக் காத்திருக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களிடம்தான் இருக்கிறது.
அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கூட்டாக அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும்போது நாம் விடுதலையை எமதாக்கிக் கொள்வதாடு ‘பிரபாகரனியம்’ என்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்துவ கோட்பாட்டுருவாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
தனக்கோ தனது குடும்பத்திற்கோ என்று ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து செல்லாத ஒரு அதி மனிதன் தனது ‘சிந்தனையை’க் கூட நம் ஒவ்வொருவருக்கானதாக மாற்றி விட்டு ‘வெறும்’ மனிதனாக சென்ற வரலாற்றுக் கதை இது.
தலைவரிடத்தில் நான் கண்ட சிறப்புகள் எனது பார்வையில் தலைவர்.!!
தலைவர் பிரபாகரனின் தமிழின எழுச்சி ஆரம்பிக்கும்வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை, பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.
ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள், புலிகளென்றால் அது மிகையாகாது.
முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் வார்த்தை “நீ தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.!
தமிழ்மொழியை, தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமந்திரம், தமிழரை ஒன்றிணைப்பதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.
இப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிரபாகரனே இருக்கின்றார். இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர். இது புலி எதிர்ப்பாளர்களுக்கு கசக்கின்றது. தமிழரின் தன்னெழுசியை சிதைக்க முற்படுகின்றனர்.
இதன், அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.
எமது மக்களால் தேசத்துரோகிகளாக, முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு, களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பதுடன், புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.!
அதற்காக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை,(புலிகளால் உரிமை கோரப்பட்ட தாக்குதல்கள்) இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை, இவர்கள் நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.
இவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.
எனது பதிவுகள் ஊடாக நான் கடந்து வந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?
அந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.?
எனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையிலிருந்து பயணித்தபோதும், அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன்.!
தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.?
#இந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.!
#கஞ்சி அல்லது பருப்பும், சோறும் என்றாலும், அது போராளிகளுக்கும் கிடைத்துவிட்டதா, என்பதை உறுதி செய்தபின்பு தான், தனது உணவுக்கு தயாராவார். பருப்பும், சோறும் என்றாலும், அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின், அவரதுமுதல் கேள்வி “சாப்பிட்டியா”..!
#அவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும், பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும், தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.
#உணவுகளை வீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.
#இது எனக்கு கிட்டண்ணை கூறியது.!
ஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப் போய் முகாம் திரும்பினால், தாங்கள், கழட்டிப் போட்டு விட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து, துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும், அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.
#புலிகளமைப்பில் எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையுடன், அந்த தாயன்பை நானும் அனுபவித்தேன்.!
#புன்னகையுடன் தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.
#வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை, பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார். பழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் இருப்பதை கண்டுள்ளேன்.
#வரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று விரும்பி, எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.
# 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், போராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால், பொறுப்பாளர்களால் முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் ,தலைவருக்கு கடிதமெழுதுவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல், போராளிகளிடம் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த, தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம்காணப்பட்டமையே இதற்கு காரணம்.
#தனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த போராளிகளிடம், சிறிய போராளிகளாக இருந்தாலும், கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.!
#ஒரு சிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.
# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.
#போராளிகளுடன் உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.
#பொறுப்பாளராக இருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும்பாலும் எல்லாத்தளபதிகளும், பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
#1991 இன் ஆரம்பத்தில் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை, தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.
தன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.!
அவரது போராளிகள் மீதான அன்பு இப்படித்தான் அடிக்கடி வெளிப்படும்.!
#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது, ஒரு கர்ப்பணிப்பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில், கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கிச் சுமந்தபடி நடக்கமுடியாது, சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை, மீறி அவர்களைக் கடிந்து வாகனத்தை நிறுத்தினார்.
அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால், நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு, புதுக்குடியிருப்பு நோக்கி, அந்த பெண்மணி செல்ல வேண்டியிருந்தது. அந்தத் தாயின் துன்பத்தை உணர்ந்த தலைவர், தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி, தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவ வைத்தார் எங்கள் தலைவர்.
#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து, காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு, தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சம்பவத்தின் போது, கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு இதை சொல்வதற்கு தவறவில்லை. அடுத்தநாள் தன்னுடன் நிற்கும் போராளியை வைத்தியசாலைக்கு அனுப்பி அந்த மனிதரின் நலன் விசாரித்தமை தலைவரின் இன்னொரு சிறப்பு.
#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில், கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று, அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில், பூசையின் நிறைவின் பின், அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி, சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.
இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல், சேமக்காளையில் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை, கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை, அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார். போராளிகளின் தவறுகளையும் தன் தலையில் சுமர்ந்தார்.
இந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து, தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை. இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.!
#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த, சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக,போராளிகள் இருந்தபோதும், திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் அதில் பலியாகினர்.
இதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும், இப்படியான அசம்பாவிதங்களுக்கு தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.!
#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள், ஒவ்வொருத்தராக வந்து, அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.
இதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள், அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.
போராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான நடவடிக்கை. ஆனால், இந்த நடவடிக்கையின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன், அம்மானும் தலைவரை சந்திக்கப்போனபோது. தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத்தலைகுனிய வைத்துவிட்டது.!
வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள். நேருக்கு நேர் மோதியே வெல்வார்கள், என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத கம்பிக்கூடும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.
போரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர்.!
இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.!
இது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம் தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.!
உறுதியில், உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும், மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் தலைவரின் அழகு தனியழகே..
ஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.!
நரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும், அவரை புரிந்துகொள்வது கடினமே.!
பெருமையுடன் துரோணர்.!!
—
விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த யாரும் அறியாத அதி சிறந்த பண்பு!
தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல, அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் கூறுகையில்,
நான் கண்டவர்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நல்லெதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர்.
கீழ் உள்ளவர்கள் செய்த தவறுகள் அத்தனையையும் தன்மேல் போட்டுக்கொண்டு, அத்தனை தவறுகளையும் தானே ஏற்றுக்கொண்டார்.
உண்மையில் சிறந்த தலைமைத்துவ பண்பை பிரபாகரன் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் காரணமானவர் அல்ல. அன்றிருந்த அரசியல் தலைவர்களே முழுக்க முழுக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
“தலைவர் பிரபாகரன்” என்று இருந்த பதவி நிலையை போராட்டத்தை பன்முகப்படுத்தும் நோக்குடனும் அதற்கான அர்த்த செறிவின் ஆழத்தை உணர்ந்தும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புலிகள் ‘தமிழீழ தேசியத்தலைவர்’ என்ற பதத்தை புழக்கத்தில் கொண்டுவந்தனர்.
பிற்பாடு புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் எல்லைகள் கடந்த தமிழின தலைவராக உருவெடுத்திருக்கும் அவரது பரிமாணத்தின் வீச்சை உணர்ந்த அரசியல் தலைவர்கள்/அரசியல் விமர்சகர்கள்/வரலாற்றாசிரியர்கள் அவரை ‘தமிழின தேசியத் தலைவர்’ என்று விளித்தது சமகால வரலாறு.
2009 தமிழின அழிப்பிற்கு பிற்பாடு புலிகளின் போராட்ட வழிமுறைகளும்/ அவர்கள் அனைத்துலக சதிகளினூடாக அழிக்கப்பட்ட பிராந்திய பூகோள அரசியலும்/ அரச பயங்கரவாதத்தை மையப்படுத்திய “சர்வதேச உறவுகளும்” / குறிப்பாக நந்திக்கடல் நோக்கிய அவரது நகர்வும் தலைவர் பிரபாகரன் குறித்த வேறொரு அரசியல் பரிமாணத்தை உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் சார்ந்து எழுதியிருக்கிறது.
அது “பிரபாகரனியம்” என்ற விடுதலைக் கோட்பாடாக கட்டவிழ்ந்து ஒடுக்கப்படும் இனங்களுக்கான ஒரு விடுதலைக் கோட்பாடாக முகிழ்ந்திருக்கிறது.
எனவே நாம் இனி அவரை தமிழர்களுக்கு மட்டும் பொதுவான தலைவராக குறுக்குவது அரசியல்ரீதியாகவும்/ கருத்தியல்ரீதியாகவும் தவறானது.
உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக வரலாறே அவரை உருவகித்திருக்கிறது.
எனவே நாம் வேறெந்த அடைமொழிகளையும் தவிர்த்து குறிப்பிட்ட இன அடையாளத்திற்குள் குறுக்காமல் பொதுவாக ‘தேசியத்தலைவர்’ என்று விளிப்பதே அரசியல் பெறுமதி மிக்கதென்பதுடன் எமது நீதிக்கான பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலாகவும் இருக்க முடியும்.
என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்.
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும்.
ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது.
அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.
இதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு குழப்பமும் இல்லை.
பிரபாகரனியம்
பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..
உலகின் போராடும் தேசிய இனங்களின் ஆன்மா – இயங்கியல் – அசைவியக்கியம்.
பிரபாகரனியம்’ என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல.. எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த ‘நடைமுறை அரசு’ குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது. ‘பிரபாகரனியம்’ இதை இன்னும் உரத்து பேசும். விடுதலைக்கான கோட்பாடுகளை கட்டவிழ்க்கும்..